காதல் என்ற பெயரில் ஏமாற்றி, நண்பர்களின் உதவியுடன் சிறுமி பாலியல் பலாத்காரம்.. அரைவேக்காடுகள் கைது.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அனந்தபாலம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஆல்டோ மைக்கேல் டோனிக். இவன் வாணியங்குடி பகுதியை சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவியுடன் முதலில் நட்பாக பழகி வந்துள்ளான். 

பின்னாளில் இந்த நட்பை காதலாக மாற்றிய கொடூரன், மாணவியை காதல் வலையில் விழ வைத்துள்ளான். இருவரும் காதலித்து வந்த நிலையில், இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதற்கு பெண்ணின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆல்டோ மைக்கேல் தனது மூன்று நண்பர்களின் ஆலோசனைப்படி, தனது காதலியான அந்த மாணவியை வீட்டிலிருந்து அழைத்து சென்றுள்ளான்.

பின்னர், அங்குள்ள உலக்கை அருவி மலை பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளான். இந்நிலையில், மாணவியின் தாயார் தனது மகள் மாயமாகிவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, விசாரணையில் உலக்கை அருவி பகுதியில் மாணவி இருப்பது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, நாகர்கோவில் மகளிர் காவல் துறையினர் விரைந்து மாணவியை மீட்ட நிலையில், ஆல்டோவிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர். அவனுக்கு உதவியாக இருந்த நண்பர்களான கோட்டார் பகுதியைச் சார்ந்த சூர்யா, கிஷோர் குமார், காட்வின் மோசஸ் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Nagarcoil child Sexual Abuse Police Investigation Using Love Trap


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->