" கொரோனாக்காரன் " என கலாய்த்தவனை, மருத்துவமனையில் படுக்க வைத்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் பெரியவிளைக்கடை பகுதியை சொந்த ஊராகக் கொண்டவர் சுபாஷ். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கொரோனா காரணமாக, சொந்த ஊருக்கு சென்று உள்ளார். 

இவருக்கு கன்னியாகுமரியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு கொரோனா இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும், பாதுகாப்பு கருதி சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அங்குள்ள பகுதியில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த அஜின் ராய் என்பவர் சுரேஷை பார்த்து, அவ்வப்போது " கொரோனாக்காரன் " என்று கூறி கிண்டலும் கேலியும் செய்து வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சுபாஷ், இதுகுறித்து தனது சகோதரரான செல்வத்திடம் கூறியுள்ளார். 

இதனால் கடுமையாக வேதனைப்பட்ட நிலையில், தனது சகோதரரின் மன வேதனையை புரிந்து கொண்ட செல்வம், ஆத்திரமடைந்து அஜினை உடைந்த பாட்டிலால் குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அஜின் ராய், ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக குலசேகரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் தெரிவிக்கையில், கொரோனா என்பது கேலி செய்யும் விஷயம் இல்லை. இது ஒரு தொற்று நோய்.. கேலி பேசியவருக்கும் கொரோனா பரவலாம். மேலும், ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்க வேண்டிய சூழ்நிலையில், கேலி பேசுவது சரியானதல்ல என்று கூறினர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari murder attempt irritating speech police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->