கொரோனா நோயாளிகளுக்கு புது ரெசிபி.! அதிமுக அரசின் அசத்தல் செயல்பாடு.!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் வாரந்தோறும் அதிமுக சார்பில் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் மூலிகை கலவையுடன் கூடிய சிக்கன் பிரியாணி வழங்கப்படுகிறது. 

மேலும், நேற்று நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் இருக்கும் திருமண மண்டபத்தில் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், முருங்கை இலை ஆம்லெட் தயாரித்து வழங்கப்பட்டது. சித்த மருத்துவ முறைப்படி கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக இந்த முருங்கை இலை ஆம்லெட் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இதில், புரதம், இரும்பு சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ஆம்லெட்டில் 3 முட்டைகள், பால், பூண்டு, வெங்காயம், மஞ்சள்தூள், தேங்காய் துருவல், சீரகம், இஞ்சி ஆகியவையும் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த முருங்கைக் கீரை ஆம்லெட் ஆனது 550 கொரோனா நோயாளிகளுக்கு முதல்கட்டமாக வினியோகிக்கப்பட்டது. இது போன்ற சத்தான உணவுகளை நோயாளிகளுக்கு தயாரித்து வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. நோயாளிகள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களிடமும் இந்த முருங்கை இலை ஆம்லெட் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanniyakumari admk administrators make murungaikeerai omlet to corona patient 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->