வாலாஜாபாத் சண்டை பஞ்சாயத்து.. துரை எப்பவுமே அப்டித்தானாம்..!! - Seithipunal
Seithipunal


வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் இரும்பு ராடுடன் நடந்த அடிதடி சம்பவத்தில், குறித்த நபர் ஏற்கனவே பெண்களை அடித்து சாலையில் இழுத்து வந்த வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் இருக்கும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற கும்பல், இளைஞர் ஒருவரை முதலில் தாக்கிய நிலையில் அவர் பதிலுக்கு இரும்பு குழாயுடன் அந்த கும்பலை ஓட விட்டார். 

அவர் குறித்த விசாரணையில், வெண்குடி கிராமத்தைச் சார்ந்த கள்ளச்சாராய வியாபாரி கணேசன் என்பவரின் மகன் மணிகண்டன் என்பது தெரியவந்தது. இவனை பம்பை மணிகண்டன் என்று கூறினால் அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் தெரியும் என்றும் கூறப்படுகிறது. எந்த சமயத்திலும் அரை போதையில் சுற்றி திரியும் பம்பை மணிகண்டன், அடிக்கடி அப்பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். 

அம்பேத்கர் பிறந்த நாள் விழாவிலும் அப்படி வம்பு செய்த நிலையில் அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கொடுத்த கன்னியப்பன் என்பவரை, காவல்துறையினர் கருப்பு ஆடுகள் மணிகண்டனின் தந்தை கணேசனுக்கு கன்னியப்பனை கட்டிக்கொடுத்துள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், அவனது தந்தை கணேசன் ஆகியோர் சேர்ந்து சம்பவத்தன்று கன்னியப்பனின் மனைவி மற்றும் மாமியாரை அடித்து உதைத்துள்ளார்கள். இது தொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் மாமூல் ஆசையால் வழக்குப்பதிவு இல்லாமல் போயுள்ளது. 

இந்நிலையில், வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சியானது காவல்துறை உயர் அதிகாரிகளின் பார்வைக்கு எட்டவே, வாலாஜாபாத் காவல்துறையினர் தற்போது மணிகண்டனை கைது செய்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram Walajabad Fight Issue Investigation Revokes Truth


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->