எழவு வீட்டிற்கு வந்த எழவெடுத்தவனின் அட்ராசிட்டி.. காவல் நிலையத்தில் ஐயோ அம்மா கதறல்..! - Seithipunal
Seithipunal


துக்க நிகழ்விற்கு வந்தவன், நானும் ரவுடிதான் என்ற பாணியில் அங்கிருந்த கடைகளை அடைக்க சொல்லி தாக்குதல் நடத்திய நிலையில், காவல்துறை அதிகாரி வந்ததும் சம்பவத்தில் இருந்து தலைதெறித்து ஓடி, காவல் நிலையத்தில் காலில் விழுந்துள்ளான். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராதோட்டம் பகுதியைச் சார்ந்தவன் முருகன். இவன் அங்கு துக்க நிகழ்வுக்கு சென்று இருந்த நிலையில், இவனது கூட்டாளிகளும் உடன் சென்றுள்ளனர். இதன்போது தனது கூட்டாளியுடன் சேர்ந்து, " துக்க நிகழ்வுக்கு நான் வந்துள்ளேன், உனக்கு மட்டும் வியாபாரமா? " என்று கேள்வி எழுப்பி கடையை அடைக்க கூறியுள்ளான். 

இதற்கு மறுப்பு தெரிவித்த கடையின் உரிமையாளர்களிடம் வாக்குவாதம் செய்து, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடையை தாக்க தொடங்கியுள்ளான். இதன்போது எதற்ச்சையாக அப்பகுதி வழியாக காவல்துறை வந்த நிலையில், அதிகாரியை கண்டதும் அல்லக்கைகள் தலைதெறித்து ஓடியது. 

கடை உரிமையாளர்கள் சுதாரித்துக்கொண்டு முருகனை பிடித்து காவல் துறையினரிடம் விஷயத்தை கூறவே, காவல் நிலையத்திற்கு அனைவரும் சென்றுள்ளனர். இதன்போது, ஐயா என்னை விட்டுவிடுங்கள் என வடிவேல் போல காவல்துறையினர் மற்றும் கடையின் உரிமையாளர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறியுள்ளான். 

இதனால் மனம் மாறிய கடை உரிமையாளர்கள் அறிவுறுத்தி எழுதி வாங்கிவிட்டு அனுப்ப வேண்டும் என்று காவல் துறையினரிடம் கோரிக்கை வைக்கவே, இதுபோன்ற சம்பவத்தில் இனி நான் ஈடுபடமாட்டேன் என கைப்பட எழுதி கொடுத்த கடித்ததை வாங்கிவைத்துக்கொண்டு எச்சரித்து அனுப்பினர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram pullingow fight with Shop Owners close shop his feeling was sad


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->