20 நிமிடத்தில் பிரியாணியை சாப்பிட்டால், அட்டகாசமான பரிசு..! - Seithipunal
Seithipunal


கொரோனா பரவலால் உலகமே முடங்கியது. பலருக்கும் வேலை வாய்ப்புகள் பறிபோன சூழல் ஏற்பட்டது. வாடிக்கையாளர்களை நம்பி கடை நடத்தி வந்த பலரும், வாடிக்கையாளர்களை இழந்து இழப்பை சந்தித்தனர். தற்போது, ஊரடங்கில் பல்வேறுகட்ட தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால், புத்துயிர் பெற்றுள்ள பல்வேறு பொருட்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள், தங்களின் வாடிக்கையாளர்களை கவர பல செயல்களில் களமிறங்கியுள்ளனர். 

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கூட மஹாராஷ்டிராவில் உள்ள புனேவில் செயல்பட்டு வரும் உணவகத்தின் உரிமையாளர், 4 கிலோ அசைவ உணவுகளை சாப்பிடுவோருக்கு ராயல் என்பில்டு இருசக்கர வாகனத்தை பரிசாக வழங்குவதாக அறிவித்தார். இந்த போட்டியில் பலரும் கலந்துகொண்ட நிலையில், ஒருவர் வெற்றியடைந்து பரிசை தட்டி சென்றார். 

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆம்பூர் பிரியாணி கடையின் சார்பாக வெளியிடப்பட்டதாக கூறி போட்டிக்கான புகைப்படம் வைரலாகி வருகிறது.  இது குறித்த புகைப்படத்தில், " உணவக நிர்வாகம் தரப்பில் விநியோகம் செய்யப்படும் பிரியாணியை 20 நிமிடத்திற்குள் சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடும் நபர்களுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசு என்ற அடிப்படையில் பக்கெட் பிரயாணிகள் பரிசாக வழங்கப்படவுள்ளது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், போட்டியின் நிபந்தனையாக, " முதலில் ரூ.260 முன்பணம் கொடுத்து பதிவு செய்யப்பட வேண்டும், சாப்பிடும் நேரத்தில் விக்கல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டால் போட்டியில் இருந்து நீக்கம் செய்யப்படுவீர்கள், மது அருந்திவிட்டு பிரியாணி சாப்பிட வரக்கூடாது, போட்டியில் 20 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம் " எனவும் கூறப்பட்டுள்ளது. 

வாடிக்கையாளர்களை கவர சாப்பிடும் போட்டிகள் வைப்பதில் எந்ததொரு தவறும் இல்லை, தற்போதைய கொரோனா பரவல் சூழ்நிலையையும் மனதில் வைத்து கட்டுப்பாடுகளுடன் செயல்பட வேண்டும். சாப்பிடுபவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் அல்லது விக்கல் போன்றவை ஏற்பட்டு மயக்கம் போன்றவை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வசதியையும் வைக்க வேண்டும். மாற்றாக போட்டி என்ற பெயரில் வருமானத்தில் முக்கியத்துவமாக இருந்தால், விக்கல் ஏற்பட்ட உயிர் பறிபோகும் வாய்ப்பு உள்ளது என்பதை போட்டியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram Melmaruvathur Sothupakkam Ambur Biryani Shop Contest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->