மருத்துவ பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்.. காமுகன் பணியிடமாற்றம்.! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அரசு அலுவலகங்களுக்கு பணியாளர்கள் பணிக்கு வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. 

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவ பிரிவில் பணியாற்றும் பெண் ஊழியருக்கு, ஹோமியோபதி பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவ அலுவலர் முத்து கிருஷ்ணன் என்பவர் கடந்த 18 ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக பணியாளர்கள் குறைந்த அளவே வந்த நிலையில், சம்பவ தினத்தன்று பாதிக்கப்பட்ட பெண்ணும் - முத்துகிருஷ்ணனும் மட்டுமே அங்கு இருந்துள்ளனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி முத்துகிருஷ்ணன் அத்துமீறிய நிலையில், பெண்மணி அங்கிருந்து போராடி தப்பி வந்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தால் அரசாங்க வேலைக்கு பாதிப்பு வந்துவிடும் என்று கருதிய பெண்மணி, பின்னர் தைரியத்தை வரவழைத்து மாவட்ட தலைமை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுத்ததை உறுதி செய்யவே, முத்துகிருஷ்ணன் மதுரைக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram GH Staff Sexual Torture Issue Culprit Transferred Madurai GH


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->