ஓசி சாம்பார் கேட்டு அடாவடி.. காவல்துறையை வைத்து 5 ஆயிரம் பைன்.. காஞ்சிபுரத்தில் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


ஓசி சாம்பார் கொடுக்கவில்லை என்ற காரணத்திற்காக, ஐந்தாயிரம் அபராதம் விதித்த காவல்துறையினரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பிரபல தனியார் ஹோட்டலில், கடந்த 9 ஆம் தேதி சென்ற காவல்துறை ஜீப் ஓட்டுநர் தன்ராஜ், ஓசி சாம்பார் கேட்டுள்ளார். ஓட்டலில் பணியில் இருந்த ஊழியர்கள் சாம்பார் இலவசமாக தர இயலாது என்று கூறவே, இதனால் உணவக ஊழியர்களுக்கும் - தன்ராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து, மறுநாளே அந்த உணவகத்திற்கு சென்ற உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கம், உணவகத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்று கூறி ரூபாய் 500 அபராதம் விதித்துள்ளார். 

உடனடியாக அருகிலிருந்த ஜீப் ஓட்டுனர்கள், ஓசியில் சாம்பார் கேட்டா கொடுக்குறதில்லை, இந்த ஹோட்டலுக்கு எல்லாம் 500 ரூபாய் அபாரதமா?. ரூ.1000 பைன் போடுங்க என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனையடுத்து, உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ரூபாய் ஐந்தாயிரம் அபராதம் விதித்துள்ளார். 

இதனால் பொறுமையை இழந்த உணவக உரிமையாளர், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உணவக வியாபாரிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram Collector Office Opp Sri Ramanaas Hotel Police Atrocity 14 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->