டாக்டர்.. இந்த பாம்பு என்னைய கடிச்சிருச்சு.. 7 வயது சிறுவனின் வியப்பு செயல்.. நெகிழ்ந்துபோன மருத்துவர்கள்.! - Seithipunal
Seithipunal


தன்னை கடித்த பாம்பை பையில் பிடித்து சென்ற சிறுவன், மருத்துவர்களிடையே தன்னை இந்த பாம்பு கடித்துவிட்டது என கூறிய நிலையில், ஒரு வார போராட்டத்திற்கு பின்னர் சிறுவன் பூரண நலன் பெற்று இல்லத்திற்கு திரும்பியுள்ளான். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏகனாம்பேட்டை பகுதியை சார்ந்தவர் ராமு. இவருக்கு 7 வயதுடைய தர்ஷித் என்ற மகன் இருக்கிறார். 7 வயது சிறுவனான தர்ஷித் அங்குள்ள பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி அங்குள்ள வெள்ளகேட்டு கிராமத்தில் உள்ள பாட்டியின் வீட்டிற்கு சென்றுள்ளான். 

அங்கு இருக்கும் வயல்வெளியில் சிறுவன் விளையாடுகையில், தன்னை எதோ கடிப்பது போல உணர்ந்துள்ளான். இதனையடுத்து, அதனை விரட்டி சென்று அடித்த நிலையில், அது கொடிய விஷமுள்ள கண்ணாடி வீரியன் பாம்பு என்பது தெரியவந்துள்ளது. 

பாம்பை கையில் எடுத்த சிறுவன் பெற்றோரிடம் விஷயத்தை தெரியப்படுத்தவே, அவர்கள் பதறியபடி பிள்ளையை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் சிறுவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். 

ஆனால், பாம்பு கடித்ததற்கான அறிகுறிகள் சிறுவனுக்கு உடலில் தென்படாத நிலையில், 2 நாட்கள் தொடர்ந்து விஷ முறிவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு 3 ஆவது நாள் சிறுவன் சென்ற நிலையில், கால்கள் வீக்கமடைந்து உடல்நிலை மோசமாகியுள்ளது. 

இதனையடுத்து சிறுவனை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதி செய்யவே, மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஒரு வாரம் பாம்பு விஷம் முறிக்கும் மருந்தை வைத்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சிறுவனை பூரண குணமடைய செய்துள்ளனர். இது தொடர்பாக குழந்தைகள் சிகிச்சை நிபுணர் மருத்துவர் சீனிவாசன் தெரிவிக்கையில், " சிகிச்சை நடைபெற்ற போது சிறுவனிடம் பாம்பை எதற்கு கையில் கொண்டு வந்தாய்? என வினா எழுப்பினோம். 

இதனைக்கேட்ட சிறுவன், " பாம்பை கையில் கொண்டு வந்தால் தானே என்ன பாம்பு கண்டித்துள்ளது என உங்களுக்கு தெரியும் " என்று பதிலளித்தான். இந்த பதில் எங்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. மேலும், இளங்கன்று பயம் அறியாது என்பது 7 வயது சிறுவனின் விஷயத்தில் உறுதியாகியுள்ளது. பாம்பு கடித்த 3 மணிநேரத்திற்குள் மருத்துவமனைக்கு வந்தால் உயிரை காப்பாற்றிவிடலாம். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram 7 Aged Child byte By Snake Doctor gives life to Child Once Again


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->