47 செம்மறி கிடாவெட்டு.! ஒன்று கூடிய ஆயிரம் ஆண்கள்., கமுதி எல்லை பிடரி அம்மன் திருவிழா.! - Seithipunal
Seithipunal


எல்லைப்பிடாரி அம்மன் கோவிலுக்கு நாற்பத்தி ஏழு செம்மறி ஆடுகளை வெட்டி, மது அருந்தாமல், ஆண்கள் மட்டும் பொங்கல் வைத்து பிரார்த்தனை செய்து இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

பொதுவாக கரி விருந்து என்றாலே நம்மவர்கள் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உடலுக்கு கேடு என்று எவ்வளவு அறிவுரைகள் சொல்லிய போதிலும், மது அருந்துவதை யாரும் நிறுத்துவதாக இல்லை. அதே சமயத்தில் மது விற்பனையை தமிழக அரசும் விடுவதாக இல்லை. 

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முதல் நாடு எனும் கிராமத்தில், எல்லைப்பிடாரி அம்மனுக்கு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா வருடத்திற்கு ஒருமுறை புரட்டாசி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். 

இந்த கோவில் திருவிழாவில் ஒரு வினோதம் என்னவென்றால், திருவிழாவில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே இந்த திருவிழாவை நடத்துகின்றனர். மேலும், இந்த திருவிழாவில் கலந்து கொள்பவர்கள் யாரும் மது அருந்தி இருக்கக்கூடாது. மது அருந்தி இருந்தால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கியது. அப்போது ஒன்று கூடி ஆண்கள் அவர்களின் கால் பாதம் படாத அளவிற்கு பீடம் அமைத்தனர். நேற்று காலை மற்றும் மாலை அதில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகளை செய்தனர்.

மேலும், 47 செம்மறி கிடாக்களை பலியிட்டு, கைக்குத்தல் அரிசி சாதம் உருண்டையாக உருட்டி அதனை எல்லைப்பிடாரி அம்மனுக்கு சாத்தி பூஜை செய்தனர். இந்த திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து ஆண்களுக்கும் பச்சரிசி சாதம் உருண்டை மற்றும் கறி விருந்து பரிமாறப்பட்டது.

இந்த திருவிழாவில் வினோதமாக கருதப்படுவது :

  • இந்த திருவிழாவில் இந்த திருவிழாவில் பயன்படுத்தப்படும் எந்த ஒரு பொருளையும் பெண்கள் பார்க்கக்கூடாது.
  • விபூதி, பூஜை பொருட்கள் அனைத்தையும் அங்கேயே குழி தோண்டி புதைத்து விடுவார்கள்.
  • ஆண்கள் ஆயிரக்கணக்கில் இந்த எல்லை பிடாரி அம்மனை வழிபட்ட போதிலும், ஒருவரும் மது குடித்துவிட்டு திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப் படுவதில்லை.
  • பெண்களுக்கு முழுதடை.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamuthi yellai pidari amman


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->