இன்னும் எத்தனை துரோகங்கள்?... கொந்தளிக்கும் கமல்.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கரோனா வைரஸின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான நாடுகளில் பெட்ரோலிய பொருட்களின் தேவை குறைந்ததை அடுத்து, கச்சா எண்ணெய்யின் விலையானது உலக பொருளாதார வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. 

இதனையடுத்து பெரும்பாலான நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற பொருட்களின் விலையானது வீழ்ச்சியை சந்தித்தது. இந்தியாவில் மட்டும் கரோனா வைரஸின் தாக்கத்திற்கு மத்தியிலும் மாற்றமே இல்லாமல் பெட்ரோல் டீசல் விலை இருந்த நிலையில், தமிழக அரசு பெட்ரோல், டீசல் பொருட்கள் மீது மதிப்பு கூட்டுவரியை அமல்படுத்தியது. 

இதற்கு பலதரப்பில் இருந்து எதிர்ப்புக்குரல் வரும் நிலையில், நடிகர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், உலகமெங்கும் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும் வேளையில், அவை மீது மதிப்பு கூட்டு வரி உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதை அறிந்திருந்தும், 40 நாட்களாக மக்கள் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் நிலையில், இதை செய்வது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம் என்று கூறியுள்ளார்..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Hassan twit about petrol and diesel price increase in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->