எம்.ஜி.ஆர் யாருக்கு திலகம்?... கமல் பரபரப்பு விளக்கம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் கமல் ஹாசன் தோற்றுவித்த மக்கள் நீதி மய்யம் கட்சியானது, வரும் 2021 ஆம் வருடத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளது. மதுரையில் இருந்து துவங்கப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பரப்புரையும் மதுரையில் இருந்து துவங்கியது. 

மதுரையை தொடர்ந்து, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மக்கள் மத்தியில் மய்யத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல் ஹாசன் தகவல் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில், பிரச்சார வாகனத்தில் இருந்தவாறே மக்களிடம் கமல் உரையாற்றுகையில், " மக்கள் நீதிமய்யம் ஆளுகங்கட்சியாக மட்டுமே இருக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்க எண்ணமும் இல்லை, எங்களுக்கு ஆர்வமும் இல்லை. மக்களே சிந்தித்து செயல்படுங்கள்.

எம்.ஜி.ஆரின் மடியில் நான் வளர்ந்தவன் என்பதை நினைவில் கொண்டுள்ளேன். எம்.ஜி.ஆர். திமுகவில் இருக்கும் போது திமுக திலகமும் அல்ல.. தனிக்கட்சி தொடங்கி அதிமுக உருவான போது அதிமுக திலகமும் அல்ல. எம்.ஜி.ஆர் என்றுமே மக்கள் திலகம் " என்று பேசினார்.

ஏற்கனவே எம்.ஜி.ஆர் விவகாரத்தில் கமல் தெரிவிக்கும் கருத்து தேவையற்றது என்றும், அரசியலுக்காக அவர் அவ்வாறு பேசி வருகிறார் என்றும் அதிமுக கட்சியை சார்ந்த அமைச்சர்கள், தொண்டர்கள் தெரிவித்து வந்த நிலையில், கமலின் பேச்சு அதிமுகவினரிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விஷயங்கள் தொடர்பாக அவர் பதிவு செய்துள்ள ட்விட்டில், " புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Hassan Speech about MGR Makkal Thilagam 15 Dec 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->