ரஜினியிடம் பேசிவிட்டு சொல்கிறேன் - கமல் ஹாசன் பதில்.! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என டிசம்பர் 29 ஆம் தேதி திட்டவட்டமாக அறிவித்த நிலையில், ரஜினி தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் வற்புறுத்தி வருகின்றனர். மேலும், நேற்று சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிய ரஜினிகாந்த், இன்று பரபரப்பு அறிக்கையையும் வெளிப்படுத்தி, அரசியலுக்கு வர வேண்டும் என வற்புறுத்த வேண்டாம் என ரசிகர்களை கேட்டுக்கொண்டார். மேலும், உடல்நிலை காரணமாக நான் வரவில்லை என்றும் தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்நிலையில், கோயம்புத்தூரில் வைத்து நடிகர் கமல் ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " ரஜினி எனது நண்பர்.. அவரின் உடல்நிலை எனக்கு முக்கியம். ரஜினியை நேரில் சந்தித்து பின்னர் விபரத்தை கூறுகிறேன். இப்போது எனக்கு தெரியாமல் ரஜினி குறித்து கூறுவது தவறானது. ரஜினி மக்கள் மன்றத்தினரின் ஆதரவு குறித்து நான் பேசிவிட்டு கூறுகிறேன் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Hassan Pressmeet about Rajinikanth 11 Jan 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->