சாமியாரிடம் இருந்து கோடி கோடியாக கைப்பற்றப்பட்ட பணம்..! ரைடியில் பதறிப்போன வருமான வரித்துறையினர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லிக்கு அருகே விஜயகுமார் என்பவர் தன்னை கல்கி அவதாரமாக அறிவித்து ஒரு ஆசிரமத்தை தொடங்கினார். மேலும்., தன்னை ஆன்மீகவாதியாக அடையாளப்படுத்தி அவர்., இதனாலேயே பிரபலமானார். 

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா., கர்நாடகம் மற்றும் இந்தியா முழுவதும் இவருக்கு ஆசிரமங்கள் அடுத்தடுத்து உதயமானது. இவருக்கு வெளி நாடுகளிலும் இருந்து பக்தர்கள் வருகை தந்திருந்தது., இவர் சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ச்சியுடன் இருந்தனர். 

மேலும்., இவரது ஆன்மீக சொற்பொழிவை கேட்ட பகதர்கள் வெளிநாடுகளில் பல ஆசிரமங்கள் திறந்தனர். மேலும்., இவருக்கு பல ஊர்களில்/நாடுகளில் ஆசிரமங்கள் இருந்தாலும்., சென்னையில் 20 கிளைகள் மட்டுமே திறக்கப்பட்டது. 

இதுமட்டுமல்லாது காணிக்கை என்ற பெயரில் பூஜை கட்டணம் இன்னும் பல என்று பணம் கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டே இருந்தது. தங்க நகைகள்., வைர நகைகள்., ஆபரணங்கள் போன்றவை அதிக அளவில் கிடைத்துள்ளது. 

இவ்வளவு பணம் கிடைத்தும் அரசுக்கு சேர வேண்டிய வரியைச் செலுத்தாமல் இருந்துள்ளனர்., பெருமளவு வரிஏய்ப்பு செய்து வந்ததாக ரகசிய தகவல்கள் அடுத்தடுத்து கிடைத்ததை அடுத்து., இதனைத் தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். 

இந்த நிலையில்., வருமான வரி அதிகாரிகள் கடந்த 16 ஆம் தேதியில் சென்னை., ஹைதராபாத்., பெங்களூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் கல்கியின் ஆசிரமங்களில் சோதனை நடத்தினர். ஒட்டுமொத்தமாக அன்றைய நாளில் சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடியாக சோதனை நடைபெற்றது. 

இந்த சோதனையின் போது இந்திய ரூபாய் நோட்டுகள்., வெளிநாட்டு பணங்கள்., தங்க நகைகள்., வைர ஆபரணங்கள் போன்றவை அதிக அளவில் கிடைத்தது. எவ்வுளவு பணம் சிக்கியது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் மட்டும் வெளியாகாமல் இருந்தது. 

இந்த சமயத்தில்., தற்போது சோதனையில் எவ்வுளவு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது என்று அறிக்கை ஒன்று வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ளனர். கல்கி பகவானுக்கு சொந்தமான 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில்., ரூ.43 கோடியே 90 லட்சம் ரூபாயாகவும்., வெளிநாட்டு பணம் என்ற வகையில் இரண்டரை மில்லியன் அமெரிக்க டாலரும் சிக்கியுள்ளது. 

சுமார் 80 கிலோ தங்க கட்டிகள் மற்றும் நகைகள்., 1271 வைரக்கற்கள் என கணக்கில் காட்டப்படாத ரூ.500 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்., கல்கி பகவான் குழுமம் என்ற பெயரில் அமெரிக்கா., ஐரோப்பா மற்றும் சீனா போன்ற நாடுகளில் பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டதும் தெரியவந்தது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kalgi trust income tax rid


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->