களக்காடு தீ விபத்தை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு 10 ஆயிரம் சன்மானம் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


களக்காடு மலையில் கடந்த மூன்று நாட்களாக தீ பற்றி எரிந்துவந்த நிலையில், அந்த தீ விபத்து குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு அறிவித்துள்ளது வனத்துறை.

நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள களக்காடு வனப்பகுதியில் புலிகள் காப்பகம் அமைக்கபட்டு சிறுத்தை, கரடி, புலி, கரடி, யானை, செந்நாய், சிங்கவால் குரங்கு உள்ளிட்ட விலங்குகள் பாதுகாக்கபட்டு வருகின்றது.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. தகவல் அறிந்த்தும் சம்பவ இடத்திற்க்கு களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு தலைமையில் வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், அங்குள்ள பொதுமக்கள் உள்ளிட்ட 180 பேர் தீயணைப்பு பணிகளில் ஈடுப்பட்டனர்.

அடர்ந்த வனப்பகுதி என்பதால் அங்கு தண்ணீர் வசதி இல்லாததாலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும் தீ கட்டுக்குள் வராமல் இருந்தது. அதனால்  மாவடி பொத்தை, கொசவத்தி வலை வழியாக சக்கதேவி பொடவு வரை தீ பரவி இருந்தது. வனப்பகுதியில் போக்குவரத்து வசதி இல்லாததாலும் நவீன கருவிகள் இல்லாததாலும் தீயை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த தீ விபத்து. குறித்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: இந்த தீ விபத்து மர்ம நபர்களால் ஏற்பட்டுள்ளது. வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்த குற்றவாளிகள் யாரெனும் இந்த தீ விபத்துக்கு காரணமாக இருப்பர் என் சந்தேகிக்கிறோம். 

தீ வைத்தவர்கள் தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.  வனப்பகுதியில் தீ வைத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kalakkad Forest Fire Issue Forest Dept Announce Reward to Reason of Behind Fire Problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->