கடையநல்லூர் பேமஸ் ஏ.ஐ.கே ஜுவல்லரி கடையின் 916 தில்லாலங்கடி வேலை அம்பலம்.. மக்களே உஷார்.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி புன்னையாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமர். இவர் விவசாயியாக இருந்த வருகிறார். கடந்த 2014 ஆம் வருடத்தின் ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி கடையநல்லூரில் உள்ள பள்ளிவாசல் பகுதியில் செயல்பட்டு வரும் ஏ.ஐ.கே கோல்டன் நகை கடையில் 20 கிராம் எடை கொண்ட தங்க சங்கிலி ஒன்றை வாங்கியுள்ளார். 

அன்றைய மார்க்கெட் நிலவரப்படி 916 தரமுள்ள தங்க நகை ஒரு கிராம் 2 ஆயிரத்து 927 விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்படி மொத்தமாக ரூபாய் 58 ஆயிரத்து 627 கொடுத்து தங்கச்சங்கிலியை வாங்கியுள்ளார். இதற்கான ரசீது பெற்றுக் கொண்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அந்த தங்க நகையை அவசர தேவைக்கு விற்பனை செய்வதற்காக புளியங்குடியில் உள்ள மற்றொரு கடைக்கு கொண்டு சென்றுள்ளார். 

அந்த நகை கடையில் தங்க சங்கிலியை வாங்கி உரசிப் பார்த்த அக்கடையின் உரிமையாளர், அந்த தங்க சங்கிலியின் ஒரு பாகத்தை எடுத்து உருக்கி சோதனை செய்துள்ளார். அப்போது அது 64 டச் அளவுள்ள மட்டமான தங்கநகை என்பதை கண்டறிந்துள்ளார். உடனடியாக அவர் விவசாயியிடம் தரம் இது தரம் குறைவான தங்க நகையென்றும், இது நீங்கள் கேட்கும் விலைக்கு போகாது என்றும் கூறியுள்ளார். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த விவசாயி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, இந்த நகையை ஏ.ஐ.கே கோல்டன் கடையில் வாங்கியதாகவும், அதற்கான ரசீதையும் கொடுத்துள்ளார். இதன்பின்னர் புளியங்குடி நகைக்கடை அதிபர் சங்கத்தில் விவசாயி ராமர் இது குறித்து புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து சங்க நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயி கடையநல்லூர் ஏ.ஐ.கே நகை கடைக்கு சென்று விளக்கம் கேட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர் முன்னிலையில் அதனை உறுதி 62 டச் தங்கம் என்பதையும் உறுதி செய்துள்ளனர். இதனால் பதறிப்போன உரிமையாளர் தவறுக்கு மன்னிப்பு கேட்டு, இன்றைய விலையில் அதே அளவுள்ள தங்க சங்கிலியை தருவதாகவும், இந்த தங்க சங்கிலியை தங்களிடம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

நகை வியாபாரிகள் சங்கத்தினரும், சம்பந்தப்பட்ட விவசாயி ராமரும் இதனை ஏற்க மறுப்பு தெரிவித்த நிலையில், நீதிமன்றத்திற்கு செல்வதாக தெரிவித்துள்ளார். கடையநல்லூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட தங்க நகை கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், சில கடைகளில் தரம் குறைந்த நகைகள் விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட கடையில் தங்கம் வாங்கியுள்ள மக்கள், அது உண்மையில் தங்கம் தானா? என்பதை சோதனை செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kadayanallur AIK Jewelry Shop Fake Jewels sales


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->