ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு., இரு கிராம மக்கள் இடையே மீண்டும் பிரச்சனை, சாலை மறியல் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


ஜெயங்கொண்டம் அருகே கோவில் குடமுழுக்கு செய்வதில் இரு கிராம மக்களிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, குடமுழுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த கடாரம்கொண்டான் கிராமத்தில் ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக கடாரம் கொண்டான் மற்றும் பக்கத்துக்கு கிராமமான பெரிய வளையம் ஆகிய இரு கிராமத்துக்கு இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இது குறித்து ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையில், இரு கிராமத்தினரும் சேர்ந்து குடமுழுக்கு நடத்த பெரிய வளையம் கிராமத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த கடாரம் கொண்டான் கிராம மக்கள், இன்று குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதனையறிந்த பெரியபாளையம் கிராமத்தை சேர்ந்த மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து ஜெயங்கொண்டம் காவல் நிலைய போலீசார் குடமுழுக்கு விழாவை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த கடாரம் கொண்டான் கிராம மக்கள் மக்கள், சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வருவாய் மற்றும் காவல்துறையினர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kadarangondan village temple function issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->