ஞானவேல் ராஜாவுக்கு என்னதான் ஆச்சு.. வழக்கறிஞர் பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக மேனகா, நீதிமணி, ஆனந்த் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். 

இந்த வழக்கில் சினிமா தயாரிப்பாளரான ஞானவேல் ராஜாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் ஞானவேல் ராஜா மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு விசாரணைக்கு வந்த பொழுது, இரண்டு நாட்கள் நேரில் ஆஜராகி 66 கேள்விகளுக்கு பதிலளித்து இருக்கின்றார். இந்நிலையில், ஆகஸ்ட் 8-இல் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது, 

இதனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார், இந்த விசாரணை ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், அதுவரை அவரை கைது செய்யவும் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

K. E. Gnanavel Raja test positive corona virus


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->