போலீசை போட்டு தாக்கிய ஜூலியின் காதலன்?! போலீசார் கொடுத்த அதிரடி புகார்!! - Seithipunal
Seithipunal


ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தனது சர்ச்சைக்குரிய முழக்கங்களால் பிரபலமானவர் ஜூலி. அதைத் தொடர்ந்து அவர்  பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு  மக்களிடம் பெரும் வெறுப்பை சம்பாதித்தார்.

இருப்பினும் அவர்  தொகுப்பாளினி, திரைப்பட நடிகை என பிஸியாகிவிட்டார்.

இந்நிலையில் ஜூலி அனிதா எம்பிபிஎஸ், அம்மன் தாயே, உத்தமி ஆகிய மூன்று படங்களில் நடித்தார். பின்னர் அவரை தனது காதலனுடன் இணைந்து மற்றொரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில், போலீஸ் வாகனத்தின் மீது நடிகை ஜூலியின் கார் மோதியுள்ளது. இதனால் சென்னை எழும்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஜூலியின் காதலனான இப்ரான் போலீசாரை தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. 

இதனை தொடர்ந்து 10 பேர் கொண்ட கும்பல் போலீசாரை தாக்கியதாகவும், வேப்பேரி காவல்நிலைய காவலர் பூபதி புகார் அளித்துள்ளார். எனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

julie boy friend complained police station


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->