அமெரிக்காவிற்கு பிறகு அயோத்தி தீர்ப்பில் தான் இது நடந்துள்ளது.! நீதிபதி பெருமிதம்.! - Seithipunal
Seithipunal


இந்திய வரலாற்றில் மிகவும் சவாலான வழக்குகளில் ஒன்றான அயோத்தி வழக்கில் நேற்று முன்தினம் டெல்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அயோத்தி வழக்கில் சிறந்த முறையில் தீர்ப்பு வழங்கியதற்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு, சக நீதிபதிகள் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.

நேற்று அசாமில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரஞ்சன் கோகாய் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், உச்சநீதிமன்றத்தின் அடுத்து தலைமை நீதிபதியாகவும், அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்றிருந்தவருமான எஸ்.ஏ.போப்டே, ரஞ்சன் கோகாய் மிகுந்த உறுதிப்பாடு கொண்டவராக இருந்ததாக நெகிழ்ந்து பேசினார்.

இதைப்போல மற்றொரு நீதிபதியான அருண் குமார் மிஸ்ரா பேசியதாவது , அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒரு அற்புதமான சாதனை என வர்ணித்தார். முடியாதவற்றை எல்லாம் ரஞ்சன் கோகாய் நிகழ்த்தி காட்டியிருப்பதாகவும் பாராட்டி பேசினார்.

மேலும், 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இருந்த அனைத்து நீதிபதிகளும் ஒத்த கருத்தோடு  தீர்ப்பு அளித்திருப்பது நீதிமன்ற வரலாற்றிலேயே அரிய நிகழ்வு என கூறிய நீதிபதி ஸ்ரீபாதி ரவீந்திர பட், இதற்கு முன்பு அமெரிக்காவில் கறுப்பின பாகுபாட்டை நீக்குவதில்தான் இதுபோன்ற நிகழ்வு நடந்து இருப்பதாக புகழாரம் சூட்டினார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஞ்சன் கோகாய், அயோத்தி தீர்ப்பு தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

judges wishes to ayoti judgement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->