கோடநாடு விவகாரம் – நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாமல் திணறிய காவல் துறை அதிகாரிகள்…! - Seithipunal
Seithipunal


 

கோடநாடு கொலை வழக்கில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் முக்கிய குற்றவாளி என்று, தெகல்கா முன்னாள் ஆசிரியர், மேத்யூஸ் பகிங்கரமாக குற்றம் சாட்டினார்.

இதனை, முதல்வர் மறுத்தார். மேலும், தமிழக போலீசார் டெல்லியில் இருந்த கூலிப்படையினரை, விமானம் மூலமாக சென்னைக்கு அழைத்து வந்தனர். பின், அவர்களை, எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிசனர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்களிடமிருந்து எந்த தகவலும் பெற முடியவில்லை.

பின்னர், எழும்பூர் நீதி மன்றத்தில், நீதிபதி சரிதா முன்பாக, அவர்களை ஆஜர் படுத்தி, நீதி மன்றக் காவலில் சிறையில் அடைக்க போலீசார் மனு அளித்தனர்.

ஆனால், இந்த வழக்கில், போலீசார் கூறிய குற்றச்சாட்டுகள் முரண்பாடாக இருப்பதாக, நீதிபதி சரிதா, சராமரியாக, காவல் துறை அதிகாரிகளிடம் அடுக்கடுக்காக கேள்வி கேட்டார். நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாமல், போலீசார் திணறினர்.

பின், வழக்கில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் முற்றிலும் முரண்பாடாக இருப்பதாக நீதிபதி தெரிவித்தார். அதற்கும் அதிகாரிகளால் பதில் அளிக்க இயலவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Judge questioned the Police officers


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->