ஜெயலலிதா உணவிற்கு ஒரு கோடியா! அரசியல் அறிவில்லாத தமிழக மக்கள் இதையும் நம்பிதான் ஆக வேண்டும்! பிரபல இயக்குனர் கருத்து!! - Seithipunal
Seithipunal


ஜெயலலிதா மருத்துவனையில் இருந்த போது, அவரின் சாப்பாட்டுக்காக மட்டும் ரூ.1 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று அப்போலோ நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இதையடுத்து  இந்த விவரம் குறித்து சமுக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனம் எழுந்தது. இட்லி சாப்பிடத்திற்கு ஒரு கோடி பில்லா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

 75 நாள் ஜெயலலிதாவின் உணவுக்காக செலவு செய்யப்பட்ட தொகை  ஒரு  கோடியா? இதெல்லாம் நம்பும்படியாக உள்ளதா? என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றார். 

இந்நிலையில், இது தொடர்பாக இயக்குனர் தங்கர் பச்சான் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்ததாவது,  

இந்தியாவிலேயே முதன்முறையாக முதலமைச்சர் பதவியில் இருக்கும் பொழுதே சிறையில் அடைக்கப்பட்டதையும், நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் முதல் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை மற்றும் தண்டம் விதிக்கப்பட்டதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம்!

அப்படிப்பட்டவருக்கு தேசியக்கொடி போர்த்தி இந்திய பாதுகாப்பு படையுடன் அணிவகுப்பு நடத்தி மக்களின் வரிப் பணத்திலேயே நினைவிடம் எழுப்பி அதை மக்கள் பணத்திலேயே பராமரிக்கப்படும் உலகத்தில் எங்கேயும் நடக்காததை எல்லாம் இங்கே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்!

          

ஆயிரக்கணக்கான கோடிகள் சுருட்டியதையும், அத்தனை அட்டகாசங்களையும் சகித்துக் கொண்டவர்களால் மருத்துவமனையில் இருந்தபோது உணவிற்காக செலவழித்ததாகக் காட்டியுள்ள ஒரு கோடி ரூபாய் பற்றி மட்டும் இப்பொழுது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இன்னும் கூட அரசியல் விழிப்புணர்வு பெறாத இப்படிப்பட்ட மக்களுக்கு வாக்குரிமை கொடுத்துவிட்டு எத்தனை முறை தேர்தல் நடத்தினாலும் எப்படிப்பட்டவர்களை இந்த மக்கள் தேர்ந்தெடுப்பார்கள், எப்படிப்பட்டவர்கள் இந்த நாட்டை ஆள்வார்கள் என நினைத்தால் வேதனை மட்டும் தான் மிஞ்சுகிறது.

நல்ல நாடு! நல்ல மக்கள்!! 

இவ்வாறு தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayalalitha Medical Expenses Apollo Thangarpachaan Say


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->