சினிமாவில் ரிட்டயர்ட் பெற்று, அரசியலுக்குள் என்ட்ரி... த.மு.மு.க ஜவாஹிருல்லா பேச்சு.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டியில் தமிழ்நாடு முஸ்லீம் லீக் கழக மருத்துவ சேவை அணியின் சார்பாக மாநில செயற்குழு கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமை வகித்திருந்தார். 

இதன்பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " தமிழகத்தில் பொதுசுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனைகள் போன்றவற்றில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் இல்லை. 

இப்படியான சூழ்நிலையில் அம்மா மினி கிளினிக்கை தமிழக அரசு தமிழகம் முழுவதும் துவங்கியுள்ளது. இதனால், பொதுசுகாதார நிலையங்கள் தனியார்மயமாக்கப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

அதிமுகவிற்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால், திமுகவின் கிராம சபை கூட்டத்திற்கு தடை விதித்து வருகிறது. பாஜகவிடம் தமிழக ஆட்சியை அதிமுக அடகு வைத்துள்ளது. திரைத்துறையில் ஓய்வு பெரும் நிலையில் உள்ள நடிகர்கள், மாற்று வேலையாக அரசியலை தேடி வருகின்றனர். இவ்வாறான நடிகர்களுக்கு தமிழக மக்கள் பாடம் கற்பித்து கொடுப்பார்கள் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jawahirullah Theni Devadanapatti Pressmeet 26 December 2020


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->