ஜல்லிக்கட்டு போட்டிகளை சமூக வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன. 

இதனிடையே, மாவட்டவாரியாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் வரும் 15ம் தேதி - அவனியாபுரம், 16ம் தேதி - பாலமேடு, 17ம் தேதி - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது  

அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில், தச்சங்குறிச்சியில் 14ஆம் தேதி, வடமலை புதூரில் 18ஆம் தேதி, கீழப்பனையூரில் 19ஆம் தேதி, விராலிமலையில் 20ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. 

இந்நிலையில்,  மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை சமூக வலைதளத்தில் நேரடி ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தற்போது தெரிவித்துள்ளது. 

அந்த வகையில், மதுரை காவலன் ஆப், யு டியூப், ஃபேஸ்புக் லைவில் ஜல்லிக்கட்டை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. 

English Summary

Jallikattu Sports In Online


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal