இன்றே கடைசி! உடனே முந்துங்கள்! இளைஞர்களுக்கான அறிவிப்பு! தமிழக அரசு தகவல்!! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன.  
 
இதனிடையே, மாவட்டவாரியாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் வரும் 15ம் தேதி - அவனியாபுரம், 16ம் தேதி - பாலமேடு, 17ம் தேதி - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது  

அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில், தச்சங்குறிச்சியில் 14ஆம் தேதி, வடமலை புதூரில் 18ஆம் தேதி, கீழப்பனையூரில் 19ஆம் தேதி, விராலிமலையில் 20ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. 

இந்நிலையில்,  15-ம் தேதி அவனியாபுரத்தில் நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான பதிவு இன்று தொடங்கியது. 

மேலும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கான காளைகள் முன்பதிவு இன்று ஒருநாள் மட்டும் தான்  நடக்கும் என கால்நடைத்துறை உதவி இயக்குநர் தெரிவித்தார்.
 
அதே போல வரும் 16-ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக, மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவும் இன்று  தொடங்கியது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jallikattu Sports in Madurai Booking started Announcement


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal