திடுக்கிடும் திருப்பம்..! ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல் துறையினர் தீ வைத்தது ஏன்..? வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சென்னையில், தேன்கூடு மீது கல் எறிந்தபோது தேனீக்கள் மக்களைக் கொட்ட வந்ததாகவும் அதனைத் தடுக்கக் காவல்துறையினர் தீப்பந்தத்தை கொண்டு சென்றதாகவும் காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளதாக ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையர் ராஜேஸ்வரன் கூறினார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்காகத் தமிழக அரசு விசாரணை ஆணையத் தலைவராக ராஜேஸ்வரனை நியமித்துள்ளது.

அவர் மதுரையில் தங்கியிருந்து கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தினார். விசாரணை கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது.

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக 1018 பேரிடம் விசாரிக்கத் தீர்மா னித்து இருந்தோம். இதில் 257 பேர் சம்மன் அளித்தும் விசாரணைக்கு வரவி ல்லை

. 512 பேர் ஒரே மாதிரியான விளக்க ங்களைக் கொடுத்ததால் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. புகைப்படங்கள் ஆயிரத்திற்கும் மேல் வந்துள்ளன. 50-க்கும் மேற்பட்ட குறுந்தகடுகள் வந்துள்ளன.

இவற்றை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்படும். நான்கு மாதங்களில் அறிக்கை தயாரிக்கப்பட்டு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும், அலங்காநல்லூரைப் பொறுத்தவரை அதிகமானோர் காவல்துறை செய்தது சரி என்றே விளக்கம் கொடுத்துள்ளனர். பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் என அதிகமானோர் காவல்துறைக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.

மாணவர் இயக்கங்கள் போராட்டத்தைத் தூண்டிவிட்டதாக விசாரணையில் பங்கேற்ற வர்கள் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளோம்.

சென்னையில் இன்னும் 16 பேரிடம் விசாரிக்க உள்ளோம். மார்ச் மாதத்திலிருந்து ஆறு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும், சென்னையில் வாகனங்களுக்குக் காவல்துறை தீ வைத்த சம்பவம் குறித்து விளக்கம் கொடுத்தவர்கள், தேன்கூடு மீது கல் எறிந்தபோது தேனீக்கள் மக்களைக் கொட்ட வந்ததாகவும் அதனைத் தடுக்கக் காவல்துறையினர் தீப்பந்தத்தை வைத்து விரட்டியதாகச் சாட்சியம் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jallikattu Protest fire secret


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal