500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் இந்த வருடத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.!  - Seithipunal
Seithipunal


தை மாதம் (ஜனவரியில்)  நடைபெற உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன. இதற்காக, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் தயார் செய்து வருகின்றனர். 

காளைகளுக்கு, மண் குவியலில் குத்துதல், ஓட்டம், நீச்சல் பயிற்சி, மாதிரி வாடி வாசல் அமைத்து திறந்து விடுதல் போன்ற பயிற்சிகளையும் உரிமையாளர்கள் கொடுத்து வருகின்றனர். மதுரை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த அரசனை வெளியிட்டது. அதன்படி, ஜனவரி, 15ம் தேதி - அவனியாபுரம் , 16ம் தேதி -  பாலமேடு,  17ம் தேதி - அலங்காநல்லூர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் வாரியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வருடத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஆங்கிலேயர்களின் புத்தாண்டான இன்று அரியலூர் மாவட்டத்தில் கோலாகலமாக தொடங்கியது. அரியலூர் மாவட்டம் மலத்தான்குளத்தில் இந்த வருடத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jallikattu in ariyalur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->