அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டால் வேதனையடைந்த காளை உரிமையாளர்கள்!. உலகப்புகழ் அழியக்கூடாது என கண்ணீருடன் குமுறல்!. - Seithipunal
Seithipunal



ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன ஊர் எதுவென்றால் அது மதுரை அலங்காநல்லூர் தான் என்று உலகம் அறிந்த ஒன்று. மதுரைக்காரர்கள் காளைகளை வளர்ப்பதிலும், அதனை போட்டிக்கு தயார் செய்வதிலும் இளைஞர்கள் மட்டுமின்றி அணைத்து வயதினரும் ஆர்வம் காட்டுவார்கள். அப்பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகள் இறந்தால் மனிதர்களின் இறப்பைக்காட்டிலும் அதிகப்படியான துக்கம் அனுசரிக்கப்படும்.

ஒரு வருடம் காத்திருந்து தெய்வமாய் வணங்கி சுத்தபத்தமாய் விரதம் இருந்து  அலங்காநல்லூரை தேடி காளையர்களும், காளைகளும் வருவது வழக்கம். இந்தவருடம் பல காளை உரிமையாளர்களும் காளைகளும் மிகவும் சிரமப்பட்டுள்ளன. 

இந்தவருடம் இரவு பத்து மணிக்கு வரிசையில் போட்டு  பள்ளிக்கூடத்தில் நின்றார்கள். உணவு உறக்கமின்றி மனிதனும் மாடுகளும் ஒன்றோடு ஒன்று உரசியபடியே நின்றார்கள்.

அலங்காநல்லூரில் அவிழ்க்க முடிந்தது 600 மாடுகள் ஆனால் டோக்கன் கொடுத்தது 2000 க்கு மேல். தெய்வமாய் வணங்க வேண்டிய மாட்டின் காலடியில் நின்றபடியே சிறுநீர் கழிக்க வேண்டிய நிலைக்கு காளை உரிமையாளர்கள் அவதிப்பட்டார்கள்.

               

அட்டியலுக்கு உள்ளே வந்தவன் வெளியே செல்ல முடியவில்லை  வெளியே உள்ளவன் உள்ளே வரமுடியவில்லை. ஆனால் கூட்டநெரிசலுக்காக காவல்துறையினரின் அடி எங்கள் தெய்வமான காளைகளின் மீது பட்டுவிடக்கூடாது என்பதற்காக எங்கள் நெஞ்சை நிமிர்த்தி அடிவாங்கிக்கொண்டோம்.

அப்பகுதிகளில் டோக்கன் விற்பனை செய்யும் அளவிற்கு சென்றுவிட்டது. ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற ஊர் என்றால் அது எப்பொழுதுமே அலங்காநல்லூர் தான். ஆனால் அங்கு கொடுக்கப்பட்ட டோக்கன் என்பது வெறும் கண்துடைப்பு போலவே தெரிந்தது.14 நம்பர் டோக்கனில் இருந்தவர் மாடு அவிழ்க்க முடியாத அவல நிலை ஏற்பட்டு மனக்கவலையுடன் திரும்பிவந்தார் சொந்த ஊருக்கு.

              

அலங்காநல்லுர் ஜல்லிக்கட்டில் இந்தவருடம் அரசியல் நடந்தாற்போல் இருந்தது. தயவுசெய்து அது வேண்டாம் தமிழக்தில் ஜல்லிக்கட்டு என்றல் அலங்காநல்லூரில் மட்டுமே பாகுபாடின்றி நடக்கிறது என்ற பெயர் எப்போதும் இருக்கட்டும். ஏனென்றல் ஜல்லிக்கட்டிற்காக போராடியது ஆளுமை அரசியல்வாதிகள் அல்ல.. இளைஞர்களும், காளை உரிமையாளர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் தான் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. 

ஜல்லிக்கட்டுக்கு வருபவர்கள் பரிசு வாங்குவதற்காக அல்ல.. தன் வீரத்திற்கு அழகு சேர்ப்பதற்காக மட்டுமே என்பதை ஒவ்வொரு ஜல்லிக்கட்டு விழா கமிட்டியாளர்களும் தெரிந்துகொள்வது அவசியம். அதேபோல் எதோ ஒரு அமைச்சர் பெயரை சொல்லி, காளையை அவிழ்த்துவிட்டு மாடுபிடிவீரர்களை பிடிக்காதே என கூறுவது ஜல்லிக்கட்டை அவமதிக்கும் செயல். தயவு செய்து இனிமேல் இவ்வாறு நடந்துகொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jallikattu bullsowner feeling for alanganallur jallikattu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->