ஜாக்டோ - ஜியோ போராட்டம்.! அரசு என்ன செய்தது?.!! வரும் நாட்களில் போராட்டம் தொடருமா?.!!  - Seithipunal
Seithipunal


ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறது. ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டு நாளை தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு வர உள்ளனர்.

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு போராட்டத்தை ஒடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், போராட்டம் குறையாமல் மேலும் தீவிரமடையவே செய்துள்ளது. இன்று தமிழகம் முழுவதும் போராட்டத்தை தொடங்கிய ஜாக்டோ-ஜியோ அமைப்பு பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகிறது. 

நாகை, நாமக்கல், திருவள்ளூர், கோவை, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட 2000 ஆசிரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறை நிரப்பும் போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்து இருப்பது மேலும் தமிழக அரசுக்கு நெருக்கடியை கொடுக்க உள்ள நிலையில்,  ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, நாளை காலவரையற்ற போராட்டத்தில் தேர்வுத்துறை ஊழியர்களும் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். 

வரும் திங்கள்கிழமையில் இருந்து பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்திருந்த நிலையில்., போராட்ட குழுவில் இருந்த பல ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதாக தொடர்ந்து தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில்., இந்த பிரச்சனை குறித்து முடிவு செய்வதற்கு முதலமைச்சர் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஆலோசனையில் நாளை நடைபெறவிருக்கும் ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் தலைமைச்செயலக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களிடம் பேச்சு வார்த்தை அல்லது அவர்கள் மீது சட்டம் பாயுமா? என்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழக தலைமை செயலகத்தில் உள்ள அதிகாரிகள்., போக்குவரத்து கழகம் ஆகியவை இந்த போராட்டத்தில் பங்கேற்கும் சூழ்நிலையில் போராட்டம் மேலும் தீவிரமடைய வாய்ப்புகள் உள்ளன. அதே போன்று இன்று தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 90 விழுக்காட்டிற்கும் மேல் உள்ள அனைவரும் போராட்டத்தில் இருந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியானது. 

போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் பணிகளுக்கு திரும்பவில்லை என்று ஜாக்டோ ஜியோ அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ள நிலையில்., அரசும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த போராட்டங்கள் வரும் நாட்களில் தொடருமா? இல்லை அரசு பேச்சு வார்த்தை நடத்தி முடிவிற்கு கொண்டு வருமா? என்று காத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jacto Geo strike continue? tamilnadu govt speech about to solve this problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->