தங்கத்தமிழ்ச்செல்வன் அறையில் நடத்தப்பட்ட திடீர் சோதனை!! தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!!  - Seithipunal
Seithipunal


மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கைப் பரப்பு செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த விடுதி அறையில் தேர்தல் பறக்கும்படையினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். 

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தங்கத்தமிழ்ச்செல்வன் கடந்த சில தினங்களாக ஜெய்ஹிந்த்புரம் ஹோட்டல் ஸ்ரீதேவியில் அறை எடுத்து தங்கியிருக்கிறார். 

அவரது அறையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசு பொருட்கள் மற்றும் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் குழு, தங்கத்தமிழ்ச்செல்வன் வெளியூர் சென்றிருக்கும் நிலையில், அவரது அறை மட்டுமல்லாது எல்லா அறைகளிலும் சோதனை மேற்கொண்டனர். 

பின்னர், விடுதிக்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவரது காரிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் பணமோ, பரிசுப் பொருட்களோ சிக்கவில்ல என்று கூறப்படுகிறது.தெரிகிறது. 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IT raid in thangatamilselvan room


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal