திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர் கோவிலுக்கு செல்ல இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்வது கட்டாயம்..! - Seithipunal
Seithipunal


இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே கோவிலில் அனுமதிக்கப்படவர் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் வெளி மாவட்டங்கள் , வெளிமாநிலங்களில் இருந்து நூற்றுகணக்கான பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ளுவர். இந்நிலையில், இந்த கோவிலில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ அதிகரித்து கொரோனா மற்றும்‌ ஒமைக்கரான்‌ நோய்‌ தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில்‌ கொண்டு 10.01.2022 (திங்கள்‌ கிழமை) முதல்‌ கொரோனா தடுப்பூசி 2 தவணைகள்‌ செலுத்தியவர்கள்‌ மட்டுமே திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர்‌ திருக்கோயிலில்‌ சுவாமி தரிசினம்‌ செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்‌ எனத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

சுவாமி தரிசனம்‌ செய்ய வருகை தருபவர்கள்‌ கட்டாயமாக கொரோனா தடுப்பூசி 2 தவணைகள்‌ செலுத்தியற்கான ஆதாரமாக
சான்று அல்லது கைபேசியில்‌ பெறப்பட்ட குறுஞ்செய்தியை காண்பித்தால்‌ மட்டுமே திருக்கோயில்‌ வளாகத்திற்குள்‌ அனுமதிக்கப்படுவார்கள்‌.

தற்போது, கோவிட்‌ நோய்‌ தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும்‌ நிலையில்‌, பக்தர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ உள்ளிட்ட அனைத்து தரப்பினரும்‌ மாவட்ட நிர்வாகத்தின்‌ நோய்‌ தொற்று பரவலை தடுக்கும்‌ இத்தகைய முயற்சிகளுக்கு, முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ கொரோனா தொற்று அதிகளவில்‌ பரவாமல்‌ இருக்க உதவிடுமாறு அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

It is mandatory to pay two doses of the vaccine to go to the Arunachaleshwar Temple in Thiruvannamalai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->