தடுப்பூசி செலுத்தினால் தான் மது.. திருவள்ளூரில் அதிரடி அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மது வழங்க வேண்டும் என மாவட்ட டாஸ்மார்க் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட டாஸ்மார் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தடுப்பூசி சான்றிதழ் காட்டாதவர்களுக்கு மது பாட்டிலை விற்க வேண்டாம் எனவும்  தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் மதுபானம் இல்லை என்ற அறிவிப்பு பலகையை மதுக்கடைகள் முன்பு வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை அடுத்து,  திருவள்ளூர் மாவட்டத்தில் மது பாட்டில் விற்பதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி சான்றிதழை கொண்டு வந்தவர்களுக்கும், அந்த சான்றிதழை செல்போனில் காண்பித்தவர்களுக்கும் மட்டுமே மதுபாட்டில் விற்பனை செய்யப்பட்டது. அந்த மாவட்டத்தில் உள்ள 365 மதுபான கடைகளிலும் இந்த உத்தரவு பின்பற்றப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

It has been reported that alcohol can only be sold if vaccinated


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->