உஷார்... ரஸ்க் சாப்பிடுவதில் இத்தனை ரிஸ்க் இருக்கா.? உள்ள என்ன இருக்குனு பார்த்திங்களா..?  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில், ஜெகதாபி அடுத்துள்ள பொராணி என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் விவேகானந்தன். இவர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கடையில் பிரிட்டானியா ரஸ்க் பாக்கெட் வாங்கியுள்ளார். பின்னர், சாப்பிடுவதற்காக ரஸ்க் பாக்கெட்டை பிரித்திருக்கிறார். அப்போது அவரின் வாயில் ஏதோ தட்டுப்படவே என்னவென்று பார்த்தவர் அதிர்ச்சியில் திகைத்து போயுள்ளார்.

rusk, seithipunal

அவரின் அதிர்ச்சிக்கான காரணம் அவர் சாப்பிட்ட ரஸ்க்கில்  இரும்பு போல்ட் ஒன்று இருந்தது. இந்த நிலையில் விவேகானந்தன் அந்த பாக்கெட்டை எடுத்து கொண்டு  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வந்திருக்கிறார். அதன் பின் மாவட்ட ஆட்சியரிடம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்துள்ளார்.

இச்சம்பவம் அந்த பகுதி மக்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது. பெரும்பாலான பொருட்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகியவை சரியாக குறிப்பிடாமல் இருப்பதே இந்த மாதிரியான சம்பவத்திற்கு காரணமாக அமைகிறது. மேலும், அந்த வரிசையில் இதுபோன்ற பிரபல நிறுவனத்தின் பொருட்கள் தயாரிப்பில் ஏற்படும்  குறைபாடு மக்கள்  உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருப்பது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

iron bolt in rusk in karur district


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->