சர்வதேச கடல் எல்லையில் சிக்கிய போதைப்பொருள் கடத்தல் கும்பல்.. விசாரணையில் பகீர்.! - Seithipunal
Seithipunal


சர்வதேச கடல் எல்லையான வாழைத் தீவு பகுதி அருகே, சந்தேகத்திற்கிடமான வகையில் மீன்பிடி படகை கடலோர காவல் படையினர் சுற்றிவளைத்தனர். இதன்போது படகில் இருந்தவர்கள், தாங்கள் இலங்கை மீனவர்கள் என்றும், இங்கு வழி தவறி விட்டோம் என்றும் கூறியுள்ளனர். 

இதனையடுத்து அந்த படகில் ஏறிச்சென்று சோதனை செய்கையில், நூறு கிலோ ஹெராயின் மற்றும் 20 கிலோ மேத்தலின் என்ற போதைப் பொருளும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்து படகை முழுவதுமாக சோதனை செய்ததில், 5 கைத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தற்போது கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் சந்தை மதிப்பு 7 கோடி ரூபாய் என்றாலும், கள்ளச்சந்தையில் இது 100 கோடி ரூபாய் வரை விலை போகும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். படகில் இருந்த இலங்கை நீர்கொழும்பு பகுதியில் சார்ந்த மனுவேல், ஜீவன், பிரசாந்த், லட்சுமண குமார், சமீரா, நிஷாந்த் கமகே ஆகிய 6 பேரை கைது செய்தனர். 

தற்போது தூத்துக்குடி சிறையில் இவர்கள் உள்ள நிலையில், இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடலுக்குள் மீன் பிடிப்பதற்கு செல்வது போல் ஈரானுக்கு பயணம் செய்து, அங்கிருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள ஹெராயின் பொருட்களை கடத்தி இலங்கையில் விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு சென்னையை சார்ந்தவர்களுடன் பழக்கம் உள்ளதா? என்பது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

International Border Drug Smuggling gang arrest by Costal Guard


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->