8 நாட்களுக்கு பின் கண்காணிப்பு கேமராவில் பதிவான T23 புலி., தேடுதல் வேட்டை தீவிரம்..!! - Seithipunal
Seithipunal


8 நாட்களுக்கு பின் T23 புலி கண்காணிப்பு பகுதியில் தென்படுவதால் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்படுள்ளது.

நீலகிரி மாவட்டம், மனசுக்குடி சுற்றுவட்டாரக பகுதிகளில்4 மனிதர்களையும் 30 மேற்பட்ட மாடுகளையும் வேட்டையாடிய T23 ஆட்கொல்லி புலியை பிடிக்க கிராம மக்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தினர்.

இதனை அடுத்து கடந்த 18 நாட்களாக T23 புலியை தேடும் பணி நடைபெற்று வருகிறது. புலியை பிடிக்க வனதுறையினர் கடுமையாக போராடி வரும் நிலையில் புலியின் கால்தடங்களை கண்டிபிடிக்க முடியாததால் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில் சிங்கார வனபகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் T23 புலி பதிவாகாததால் மாயார் மற்றும் பொக்காபுரம் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.

அப்போது முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட போஸ்பாரா  பகுதியில்  உள்ள கண்காணிப்பு கேமராவில் T23 புலி பதிவாகி இருந்தது. இதனை அடுத்து அந்த புலியை பிடிக்க போஸ்பாரா  பகுதிக்கு வனதுறையினர் விரைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Intensity of missions to catch the killer tiger


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->