நீதி கேட்க வந்த இடத்தில் நேர்ந்த அநாகரிகம்...! பெண்ணிற்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய உதவி ஆய்வாளர் அதிரடி பணியிடை நீக்கம்...!
indecency occurred place where came seek justice Assistant Inspector who sent obscene message woman abruptly dismissed
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த ராஜகோபால் மீது பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக கடுமையான புகார் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சில நாட்களுக்கு முன்பு தனிப்பட்ட பிரச்சினை தொடர்பாக புகார் அளிப்பதற்காக பெண் ஒருவர் காவல் நிலையம் சென்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போது அந்த பெண்ணின் அலைபேசி எண்ணை பெற்றுக்கொண்ட ராஜகோபால், புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், குறுஞ்செய்திகள் மூலம் தொடர்ந்து ஆபாச மற்றும் மரியாதைக்கேடான தகவல்களை அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செயலால் அதிர்ச்சி மற்றும் மனவேதனை அடைந்த அந்த பெண், சம்பந்தப்பட்ட குறுஞ்செய்திகள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் உயர் காவல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து உயர் அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், புகார் அளிக்க வந்த பெண்ணிடம் சார்பு ஆய்வாளர் ராஜகோபால் அலைபேசி வாயிலாக அத்துமீறி ஆபாசமாக தொடர்புகொண்டது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு மற்றும் நீதி தேடி வரும் பொதுமக்களிடம், குறிப்பாக பெண்களிடம் காவல் அதிகாரி இவ்வாறு ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிருப்தி மற்றும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து சார்பு ஆய்வாளர் ராஜகோபாலை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி சசிமோகன் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
indecency occurred place where came seek justice Assistant Inspector who sent obscene message woman abruptly dismissed