ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு.. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு.! - Seithipunal
Seithipunal


ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவியில் கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வருகை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அதன் காரணமாக, ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Increase in water level in Okanagan Falls Denial of permission to tourists


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->