ஏலகிரி வெள்ளைநிற உருவம்.. திக்திக் நிமிடங்களின் பின்னணி என்ன?..!! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியை சார்ந்த டாக்சி ஓட்டுநர், சுற்றுலா பயணிகளை திருப்பத்தூரில் இறக்கிவிட்டு, மீண்டும் இரவு 12 மணிக்கு வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். இந்த நேரத்தில், சரியாக சுமார் 12 மணியளவில் ஏலகிரி மலை இரண்டாவது வளைவில் வந்து கொண்டு இருந்துள்ளார்.

இந்த நேரத்தில், ஆட்களின் நடமாட்டமும் இல்லாது, பிற வாகனங்களுக்கும் குறைவாக பயணம் செய்த நிலையில், சாலையோர தடுப்பு சுவரில் வெள்ளை நிற உருவம் ஒன்று அமர்ந்துள்ளது. இதனை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான ஓட்டுநர் தனது அலைபேசியில் வீடியோ பதிவு செய்துள்ளார். 

சிறிது நேரத்தில் குறித்த வெள்ளை நிற உருவமும் மாயமாகவே, டாக்சி ஓட்டுநர் காரினை மெதுவாக இயக்கியபடி மலைக்கு சென்றுள்ளார். பின்னர் இது தொடர்பாக தனது நண்பர்களிடமும் தெரிவிக்கவே, அவர்களும் வெள்ளை நிற உருவம் குறித்த தகவலை நாங்களும் பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த சில மாதங்களாவே ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மீண்டும் இல்லங்களுக்கு திரும்பும் நேரத்தில் விபத்துகள் நடைபெறுவதாகவும், இது தொடர்பாக ஏலகிரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையிலும், வாகன ஓட்டிகள் யாரும் மது அருந்தவில்லை என்பதும், சம்பவ இடத்திற்கு வரும் நேரத்தில் தீடீரென சுயநினைவை இழந்து தடுப்புசுவரின் மீது வாகனம் மோதி விபத்திற்குள்ளாவதாக குறிப்பிட்டுள்ளனர். 

இந்த நிலையில், தற்போது குறித்த வெள்ளைநிற உருவம் மற்றும் பேய் வதந்தி பொய் என்ற தகவல் தெளிவாகியுள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. சாலையோர கொண்டை ஊசி வலையில் உள்ள ரேடியம் ஸ்டிக்கரை பார்த்து ஓட்டுநர் பயந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேய் குறித்த வதந்தியை பரப்பும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இடையே ஒருதரப்பு நபர்கள் ஏற்றுக்கொண்டாலும், மற்றொரு தரப்பில் இருந்து ரேடியம் வெளிச்சமாக இருந்தால் எவ்வாறு இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான், இந்த வீடியோ பதிவை நீங்கள் தெளிவாக பாருங்கள் என்று முட்டிமோதிக்கொள்ளும் நிலைமை உருவாகியுள்ளது. இது தொடர்பான தகவலை நேரில் யாரும் பார்க்காத வரை மர்மம் நீடிக்கும் என்றும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in yelagiri ghost fear on road


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->