நான்தாண்டா ஆத்தா வந்துருக்கேன்., நாகராஜன் என்னை ஒன்றும் செய்யமாட்டான்...! வாலாஜாபாத்தில் விசித்திர சம்பவம்.!!  - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத்தை சார்ந்த பெண்மணியின் பெயர் கபிலா அம்மையார். இவர் தன்னை பத்ரகாளி என்று கூறி விளம்பரப்படுத்தி அப்பகுதியில் பெரும் சாமியாராக திகழ்வதாக கூறப்படுகிறது. மேலும்., இவர் எம்.ஏ. பட்டதாரி என்பதும் தெரியவந்துள்ளது. 

மேலும்., 17 வயதில் இறந்துபோன தனது தங்கை உடலில் இறங்கி அருள்வாக்கு கூறுவதாகவும்., கடந்த 1999 ஆம் வருடத்தில் குடிசையில் துவங்கிய அருள்வாக்கு மையம் பிரபலமாகியுள்ளதும் தெரியவந்துள்ளது. 

walaja lady lord, walaja amma,

இவர் பணி செய்து வரும் கோவிலுக்கு இரண்டு முறை குடமுழுக்கு செய்துள்ள நிலையில்., இவரின் ஆலயத்திற்கு பக்தர்கள் அதிகம் வரவழைக்கு நாக சிலைக்கு பூஜை செய்வதற்கு பதிலாக., நிஜ நாகராஜனை கொண்டு வந்து பூவினை தூவி நாகசாந்தி பூஜை செய்துள்ளனர். 

walaja lady lord, walaja amma,

இவ்வாறாக வரவழைக்கப்பட்ட நகராஜன்களில் ஒருவர் வீரியமாக இருந்ததால் அவரை தூக்கிவிட்டு., பதுங்கிய நாகராஜனை தேர்வு செய்து பாலபிஷேகம் முடிந்தவுடன் நீச்சல் அடிக்க வைத்து பாம்பாட்டியையும் அங்கேயே பாதுகாப்பாக வைத்துக்கொண்டு பலே வித்தை காட்டி பரவசம் காட்டியுள்ளார். 

walaja lady lord, walaja amma,

இதோடு மட்டுமல்லாது பாம்பாட்டியின் உதவியுடன் கோவிலில் இருக்கும் அம்மன் சிலைக்கு நாகராஜனை அனுப்பி வைத்து கேமிராவில் பதிவு செய்து., பாம்பு வித்தையும் பக்தர்களுக்கு காண்பித்து., தன் மீது அம்மன் இறங்குவதால் நாகராஜன் தன்னை ஏதும் செய்யமாட்டான் என்று கூறி வித்தைகளை காட்டியுள்ளார். 

இதற்கு அடுத்தபடியாக அருள்வாக்கு நேரமும் வந்து சூலத்துடன் கழுத்தில் பாம்பை பயத்துடன் வைத்து., வடிவேல் பாணியில் முகத்தில் பயம் தெரியக்கூடாது என்று காட்சிகள் வெளியானது காமெடியில் உச்சம் என்று தான் கூற வேண்டும். இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலானதை தொடர்ந்து வனத்துறை சார்பாகவும் தகுந்த நடவடிக்கை எடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in walajabad fraud lord investigation case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->