சரக்கு என்ற பெயரில் சுக்கு காபி... கண்ணீரில் பணத்தை இழந்து தவித்த குடி மகன்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமமூர்த்தி சாலை பகுதியில் இருக்கும் மேம்பாலத்திற்கு அடியில் அரசு உத்தரவை மீறி மது விற்பனை நடைபெற்று வந்துள்ளது. காவல் துறையினரும் அவ்வப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், கண்காணிப்பின் போது காவல் துறையினரின் கண்களில் மண்ணை தூவி விற்பனை நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், நூதன முறையில் மது பிரியர்களை ஏமாற்றிய வாலிபர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இரு சக்கர வாகனத்தில் வருகை தந்த இரண்டு வாலிபர்கள் தங்களிடம் மதுபானம் உள்ளது என்று கூறி மது பிரியர்களிடம் ஆசை வார்த்தையை கூறியுள்ளனர். மேலும், குவாட்டரின் விலை ரூ.300 என்று கூறியுள்ளனர். 

இதனையடுத்து மதுபிரியர்கள் ரூ.300 கொடுக்கவே, மதுபானத்தை கைகளில் கொடுத்ததும் காவல் துறையினர் வருவதாக எச்சரிக்கை கூறியுள்ளனர். இடநியாயடுத்து மதுபானத்தை வாங்கியவர்கள் காவல் துறையினர் பீதியில் அலறி ஓட, இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் சென்றுள்ளனர். மதுபானத்தை வாங்கிய வாங்கிய நபர்கள் அங்குள்ள மறைவு பகுதியில் மதுபானத்தை வாங்கியுள்ளனர். 

தண்ணீர் கூட கலக்காமல் அப்படியா மது அருந்த நினைத்த நிலையில், மதுபானத்தை ருசித்த சமயத்தில் அதில் சுக்குக்காபி இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், மதுபான ஆசையில் ரூ.600 இழந்துள்ள நிலையில், மதுபானம் கிடைக்காத மன வேதனைதான் மிச்சம் என்று கண்ணீருடன் சென்றுள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Viruthunagar liquor drinking cheated


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->