அதிவேகத்தில் சென்ற சுற்றுலா பேருந்து.. விக்கிரவாண்டியில் அரங்கேறிய விபத்து. அலறித்துடித்த மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர் கிராமத்தை சார்ந்தவர் சாம்பசிவம் (வயது 70). இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராவார். கோலியனூரில் உணவகம் நடத்தி வரும் நிலையில்., இவரது மனைவியின் பெயர் கவுரி (வயது 67). 

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இறந்துவிட்ட நிலையில்., துக்க காரியங்கள் நிறைவு பெற்றதும் குடும்பத்துடன் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்துள்ளார். 

இதன்படி நேற்று தனது குடும்பத்தினருடன் சுற்றுலா வேனில் கோவிலுக்கு புறப்பட்ட நிலையில்., வேனை சின்னசாமி (வயது 35) என்பவர் இயக்கியுள்ளார். கோவிலுக்கு சென்ற இவர்கள் சாமி கும்பிட்டுவிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்துள்ளனர். 

accident, accident images,

இவர்கள் இன்று காலை 8 மணியளவில் விக்கிரவாண்டியை அடுத்துள்ள பாப்பநாம்பாட்டு தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலையில் திரும்பிய நிலையில்., இவர்களுக்கு பின்னால்  வந்து கொண்டு இருந்த மேல்மருவத்தூர் சுற்றுலா ஆம்னி பேருந்து பலமாக மோதியது. 

இதனால் நிலைகுலைந்த வேன் நடுசாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்திக்குள்ளானதில்., வேனில் இருந்த பொதுமக்கள் காயமடைந்து அலறித்துடித்தனர். இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் உட்பட 20 பேர் படுகாயமடைந்த நிலையில்., இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அனைவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in villupuram van accident peoples injured


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->