தர்பூசணி அமோக விளைச்சல் இருந்தும், விற்பனைக்கு செல்லாததால் கண்ணீரில் விவசாயிகள்.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டினை மையமாக வைத்து பரவி வந்த கரோனா வைரஸ் 284,515 பேரை பாதித்துள்ளது. 11,838 பலியாகியுள்ளனர். மேலும், 93,566 பேர் கரோனாவில் இருந்து மீண்டெழுந்துள்ளனர். இந்தியாவிலும் இதன் தாக்கம் தற்போது வெளிப்பட துவங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 5 பேர் பலியாகியுள்ள நிலையில், 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா மேலும் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கையை மத்திய, மாநில அரசு எடுத்துள்ளது. 

கரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த நாளை (21/03/2020) ஞாயிற்றுக்கிழமையன்று ஊரடங்கு கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி பேருந்துகள், இரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் காலை சுமார் 7 மணிமுதல், இரவு 9 மணிவரை வீட்டில் மக்கள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கரோனா வைரஸால் உலகளவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் விவசாயிகள் பயிரிட்டிருந்த தர்பூசணி தேக்கமடைந்துள்ளதால் பெரும் சோகத்தை அடைந்துள்ளனர். மரக்காணம் பகுதியில் உள்ள வட நெற்குணம், நகர், கந்தாடு, நல்லம்பாக்கம், ஆலத்தூர், நடுக்குப்பம், அடசல், முன்னூர், அடவல்லிக்குப்பம் மற்றும் ஆலக்குப்பம் போன்ற பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலத்தில் தர்பூசணியை பயிறிட்டு இருந்துள்ளனர்.

தர்பூசணியை அறுவடை செய்யும் பணியில் கடந்த சில நாட்களாக விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டு வந்த நிலையில், பிற மாநிலத்தை சார்ந்த விவசாயிகளும் பழங்களை வாங்கி சென்றுள்ளனர். தற்போது கரோனா எதிரொலியால் பிற மாநில வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும், தற்போது வரை 50 டன் பழங்கள் தேங்கி ரூ.15 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in villupuram former feel sad due to reduce water melon sales


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->