பெண்ணிற்கு வாட்சப்பில் ஆபாச வீடியோ.. வேலூர் போக்குவரத்து காவல் அதிகாரிக்கு வைக்கப்பட்ட ஆப்பு..!!  - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவரின் பெயர் ராஜமாணிக்கம். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த சமயத்தில்., பெண்ணொருவர் தனது மகனுடன் வாகனத்தில் வந்துள்ளார். 

இவரை இடைமறித்த அதிகாரி ராஜமாணிக்கம் வாகனத்திற்கான ஆவணங்களை கேட்ட நிலையில்., பெண்ணும் ஆவணங்களை வழங்கியுள்ளார். பெண் கொடுத்த ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்த நிலையில்., வாகனகத்தின் சைலன்சர் விதிக்கு புறமாக இருப்பதாக கூறி., வழக்குப்பதிவு செய்வதாக வேண்டும் என்றே மிரட்டியுள்ளார். 

மேலும்., அந்த பெண்ணையும் - அவரின் மகனையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று., சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக காத்திருக்க வைத்து., பெண்ணின் அலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டு அனுப்பியுள்ளார். பின்னர் அலைபேசி எண்ணிற்கு காலை வணக்கம்., மாலை வணக்கம் என்று கூறி அனுப்பிய நிலையில்., வெள்ளிக்கிழமை இரவன்று ஆபாச விடீயோவையும் பதிவு செய்துள்ளான். 

sexual harassment, sexual abuse, sexual torture,

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பெண்மணி., இது குறித்து தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., இதனை கேட்டு ஆத்திரமடைந்த உறவினர்கள் இராஜமாணிக்கத்தை முற்றுகையிட்டு சரமாரியான கேள்விகளை முன்வைத்த நிலையில்., விடியோவை நான் அனுப்பவே இல்லை என்று பொய்யுரைத்துள்ளார். 

இராஜமாணிக்கத்தின் புத்தியை அறிந்த உறவினர்கள் வீடியோ ஆதாரத்தை காண்பித்ததை அடுத்து., ராஜமாணிக்கம் மன்னிப்பு கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகளானது இணையத்தளத்தில் வைரலாகியதை தொடர்ந்து., இவரை ஆயுதப்படை காவல் துறைக்கு மாற்றி காவல் கண்காணிப்பாளர் உதார்விட்டுள்ளர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Vellore police transfer dept due to her activities


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->