வேதாரண்யத்தில்., வெயிலால் அவதியடைந்த நிலையில்., தீடீரென பெய்த மழை.! வீடுகளில் இடி விழுந்ததில் 14 பேருக்கு நேர்ந்த சோகம்.!!  - Seithipunal
Seithipunal


தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாவே கடுமையான வெயிலானது வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் மக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். 

இந்த நிலையில்., தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில்.,. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெயில் இயல்பை விட 3-4 டிகிரி செல்சியஸ் அதிகமானது.

tamilnadu weatherman new video

சில மாவட்டங்களில் திடீரென மழையானது பெய்து மக்களின் மனதை குளிர வைத்தது. தமிழகத்தில்., கோயம்புத்தூர்., சேலம்., பொள்ளாச்சி., திருப்பூர் மற்றும் பாளையங்கோட்டையில் பரவலான மழை பெய்து., வெப்பத்தை ஓரளவு தணிந்தது. டெல்டா மாவட்டங்களில் உள்ள திருவாரூர்., நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் வரும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.  

இந்த நிலையில்., வேதாரண்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்ய துவங்கியது. மழையுடன் இடியும் சேர்ந்து பெய்து., திடீரென அங்குள்ள இல்லத்தில் மின்னல் தாக்கியதை அடுத்து சுமார் 14 நபர்கள் படுகாயமடைந்தனர். மேலும்., அவர்களின் இல்லத்தில் இருந்த மின் சாதான பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன.  

இவர்கள் அனைவரும் உயிருக்கு போராடியதை அடுத்து இவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மழையே பெய்யாமல் தவித்து வந்த நிலையில்., மழை பெய்தாலும் இடியின் காரணமாக 14 பேர் மருத்துவமனையில் அனுமதியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vedaranyam 14 people affected by thunder when after long time rain


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->