தாலிகட்டும் நேரத்தில் இறக்கை முளைத்து பறந்த கிளி..! கதறியழுத மணமகன்., வாணியம்பாடியில் பெரும் சோகம்..!! - Seithipunal
Seithipunal


பழைய வேலூர் மாவட்டம் - இன்றைய திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகேயிருக்கும் பெரியவெள்ளக்குட்டை பகுதியை சார்ந்தவர் சின்னத்தம்பி. இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் சுமதி. இவர்கள் இருவருக்கும் ஐஸ்வர்யா என்ற 20 வயதுடைய மகள் உள்ளார். ஐஸ்வர்யாவின் தாய்மாமனான குடியாத்தம் பகுதியை சார்ந்த விநாயகம் (வயது 28).

விநாயகத்திற்கும் - ஐஸ்வர்யாவிற்கும் திருமணம் முடிக்க முடிவு செய்து., பெற்றோர்கள் நிச்சயம் செய்த நிலையில்., நிச்சியத்திற்கு பின்னர் திருமண வேலைகளை தடபுடலாக துவங்கி பத்திரிகைகள் கொடுத்து வந்த நிலையில்., குடியாத்தம் பகுதியில் இருக்கும் காமாட்சியம்மன்பேட்டை சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் திருமணம் இன்று காலை நடைபெறுவதாக இருந்துள்ளது. 

காலையில் திருமணம் என்பதால் நேற்றிரவே திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில்., மணப்பெண்ணும் மகிழ்ச்சியுடன் வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். இந்த சமயத்தில்., இன்று காலை திருமணத்திற்க்காக அனைவரும் தயாராகிக்கொண்டு இருக்கும் நிலையில்., மணப்பெண்ணிற்கு உறவினர்கள் நலுங்கு வைத்துக்கொண்டு இருந்தனர். 

marriage, south indian marriage, indian marriage, திருமணம்,

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் புடவை மாற்றி வர சென்ற ஐஸ்வர்யா., நீண்ட நேரம் ஆன பின்னரும் வெளியே வராததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து அறைக்குள் சென்று பார்த்த போது ஐஸ்வர்யா மாயமாகியுள்ளார். பெண்ணை காணவில்லை என்று தகவல் அடுத்தடுத்து பரவவே., உறவினர்கள் அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். 

மேலும்., மணப்பெண்ணை பல இடங்களில் தேடியும் பெண்ணை காணாததால்., இறுதி சமயத்தில் திருமணம் நின்றது. பின்னர் மணப்பெண்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே., இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்குள்ள பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vaniyambadi girl escaped from marriage


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->