அதிகாலையில் நேர்ந்த கோர விபத்து.! உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் நேர்ந்த சோகம்.! அடுத்தடுத்து மோதிகொண்ட 3 பேருந்துகள்.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் ஏதோ ஒரு இடத்தில் விபத்துக்கள் ஏற்பட்டு கொண்டு., அதனை நாம் அறிந்தும் அதற்கான வெளிப்பாடுகளாக நமது வருத்தத்தையும்., ஆதங்கத்தையும்., கோபத்தையும் தெரிவித்துக் கொண்டு இருக்கிறோம். 

உலகம் முழுவதும் நொடிப்பொழுதில் பல விபத்துக்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும்., இவ்வாறு நடைபெறும் விபத்துகளை என்னதான் செய்தாலும் நாம் தவிர்க்க முடியவில்லை. 

நாம் நடந்து செல்லும் சாலையிலேயே திடீரென ஒருவர் விபத்திற்குள்ளாவதும்., அவருக்கு ஏற்படும் உடல் காயங்களையும்., உயிரிழப்புகளையும் நாமறிவோம். அந்த வகையில்., தமிழகத்தில் உள்ள சென்னை டு திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுவது வழக்கம். 

அந்த வகையில்., தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது .இந்தச் சாலைகளில் அதிக வேகத்தில் பயணிக்கும் ஆம்னி பேருந்துகள் மற்றும் கார்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகுவது வழக்கம். மதுரையில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்துகள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. 

நொடிப்பொழுதில் நடந்த இந்த விபத்தில் சுமார் 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர்., இந்த தகவலை உடனடியாக காவல் துறையினருக்கும் அவசர ஊர்தியினருக்கும் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் அவசர ஊர்தியினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து படுகாயமடைந்து உயிருக்குப் போராடியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும்., சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அதிகாலையில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in ulunthurpettai 3 bus accident back to back 20 peoples injuries


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->