நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டு வந்த புதுமாப்பிள்ளை உடல் நசுங்கி பலியான சோகம்... உளுந்தூர்பேட்டை வாகன விபத்தில் பெரும்சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அருகேயிருக்கும் அம்மனூர் கிராமத்தை சார்ந்தவர் ஐசக் அய்யா (வயது 54). இவர் அகில இந்திய ஜனநாயக கட்சியினுடைய நிறுவன தலைவர் மற்றும் கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இவரது மகனின் பெயர் ராஜன் விண்ணரசு (வயது 24). இவர் கல்வி நிறுவனங்களை நிர்வாகம் செய்து வருகிறார். 

விண்ணரசுவிற்கு திருமணம் நிச்சயம் ஏற்பாடு செய்ததை அடுத்து, நிச்சயதார்த்தம் தூத்துக்குடியில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த நிச்சயதார்த்தம் நிறைவு பெற்று முடிந்ததும் ஐசக் மற்றும் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் வந்திருந்த 2 கார்களில் மீண்டும் அரக்கோணத்திற்கு புறப்பட்டுள்ளனர். 

இவர்களின் வாகனம் அதிகாலை சுமார் 3 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை பகுதியில் சென்று கொண்டு இருந்த நேரத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வந்த அரசு பேருந்து, இவர்களின் காரின் மீது உரசியவாறு சென்றுள்ளது. 

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காரை சாலையிலேயே நிறுத்திவிட்டு, பேருந்து ஓட்டுனரிடம் சண்டையிட்டு கொண்டு இருந்துள்ளனர். பேருந்தில் இருந்த பயணிகளும் இதனை பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர். இந்த நேரத்தில், திருச்சியில் இருந்து சென்னையை நோக்கி வந்த ஆம்னி பேருந்தானது, சாலையில் நின்று கொண்டு இருந்த அரசு பெருந்தித்ன் பின்புறத்தில் மோதியுள்ளது. 

இந்த விபத்தில், அரசு பேருந்து முன்னோக்கி நகர்ந்து காரின் பேருந்துக்கு முன்னதாக நின்று கொண்டு இருந்த விண்ணரசு, அரசு பேருந்தில் வந்த வெள்ளைச்சாமி (வயது 39), அருண்பாண்டியன் (வயது 30) மற்றும் சர்குணம் (வயது 39) ஆகியோரின் மீது ஏறியதால் நால்வரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும், காரை ஓட்டி வந்த ஓட்டுநர் வினோத் (வயது 25), பேருந்து ஓட்டுநர் கோவிந்தராஜ் (வயது 37) உள்ளிட்ட 22 பேர் பலத்த காயமடைந்து அலறித்துடித்தனர். இந்த விபத்து தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியினை மேற்கொண்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in ulundurpettai bus accident new getting marriage person died


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->