வைகை எஸ்பிரஸை சிறைபிடித்த கிராம மக்கள்.. விரைந்த அதிகாரிகள்..!! - Seithipunal
Seithipunal


நமது ஊரில் இருக்கும் இரயில்வே கேட்கள் இரயில் வருவதற்கு முன்னதாக பூட்டப்பட்டு., அவ்வழியாக உள்ள சாலையில் வரும் அனைவரும் காக்க வைக்கப்படுவது வழக்கம். சில இடங்களில் இரயில் வரும் நேரத்திற்கு தகுந்தாற் போல அதிக நேரம் மக்கள் காக்க வைக்கப்படுவதும் வழக்கம். 

மேலும்., அந்தந்த சாலையின் வாகன பயன்பாடு மற்றும் மக்கள் புழக்கத்தினை பொறுத்து பாலங்கள் அமைக்கப்பட்டு வாகனங்கள் மற்றும் மக்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில்., திருச்சியில் உள்ள இரயில்வே கேட் நீண்ட நேரம் பூட்டப்படுவதால் மக்கள் கடுமையான அவதியடைந்து வருகின்றனர். 

திருச்சி அருகேயுள்ள இரயில்வே கேட் நீண்ட நேரம் போட்டப்படுவதால் மக்கள் கொந்தளித்து., வைகை அதிவிரைவு வண்டியை சிறைபிடித்து வைத்தது நடந்துள்ளது. திருச்சி அருகேயுள்ள சன்னாசிபட்டி இரயில்வே கேட் இரவு நேரத்தில் முழுவதும் பூட்டப்பட்டு வருகிறது. 

train,

இதனைப்போன்று பகல் வேளைகளில் இரயில் வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாக பூட்டப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் கடுமையான அவதியடைந்து வருகின்றனர். மேலும்., மதுரையில் இருந்து திருச்சி வழியாக தினமும் பல்வேறு இரயில்கள் வந்து செல்கிறது. 

இதனால் கடுமையாக மக்கள் அவதியடைந்து வந்த நிலையில்., வைகை அதிவிரைவு இரயிலை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரயிலின் ஓட்டுநர் மக்கள் தண்டவாளத்தில் கூட்டமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து இரயிலை நிறுத்தியுள்ளார். 

பின்னர் விசாரணை மேற்கொண்டு இது தொடர்பாக இரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர். மேலும்., இரயில்வே கேட் இரவு நேரத்தில் இரயில் வரும் போதுதான் பூட்ட வேண்டும் என்றும்., பகல் வேளையில் இரயில் வருவதற்கு முன்னதாக பூட்ட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in trichy vaigai express stopped by village peoples


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->