மணப்பாறை துயரம் எதிரொலி..! பிற மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் எனும் கிராமத்தை சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளியான பிரிட்டோ ஆரோக்கியதாஸ். இவரது 2 வயது மகன் சுஜித் வின்சென் நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த 30 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளான். 

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள், சுஜித்தை மீட்கும் முயற்சியாக ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். 20 அடி ஆழம் தோண்டப்பட்ட நிலையில் பாறை இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

manaparai, மணப்பாறை,

இதெற்கிடையே, மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் உருவாக்கிய பிரத்யேக இயந்திரத்தின் மூலமாக குழந்தையை மீட்கும் முயற்சி நடைபெற்றது. சுஜித்துடன் தாய் கலாமேரி மற்றும் உறவினர்கள் தொடர்ந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தனர். கலாமேரி பேசியபோது சுஜித்திடமிருந்து  உம் என்று உள்ளே இருந்த பதில் வந்தது.

இரவு 10.30 மணிக்கு இயந்திரத்தின் வழியாக விடப்பட்ட கயிற்றைக் கொண்டு கைகளில் சுருக்கு போட முயற்சி மேற்கொள்ளப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்றது. அப்போது, குழந்தையின் ஒரு கையில் மட்டும் சுருக்கு சரியாக மாட்டிய நிலையில், மற்றொரு கையில் சுருக்கு மாட்டும்மோது கயிறு தவறிவிட்டது. 

இதையடுத்து மதுரை, திருச்சி மற்றும் கோவையிலிருந்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். மூன்று மாவட்ட தீயணைப்பு துறையினரும் தாங்கள் கொண்டு வந்த சாதனங்களை வைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரமாக நடைபெற்ற மீட்புப் பணியில் பின்னடைவு ஏற்பட்டது.

trichy, manaparai, திருச்சி, மணப்பாறை, manaparai bore well child,

பின்னர் ஆழ்துளை கிணற்றை சுற்றி மீண்டும் 5 பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீண்டும் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று அதிலும் தொய்வு ஏற்பட்டது. 

அதிகாலை 2.30 மணிக்கு சென்னை ஐஐடியைச் சேர்ந்த குழுவினர் வந்து பிரத்யேக சாதனங்களை கொண்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி என்.நடராஜன், வளர்மதி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அருகில் இருந்து குழந்தை மீட்புப் பணிகளைக் கண்காணித்து, ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

மேலும்., தற்போது சிறுவனின் குரலானது அதிகாலை 5 மணிக்கு மேலாக கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. சிறுவன் தற்போது 70 அடி ஆழத்தில் மாட்டியுள்ள நிலையில்., தேசிய மீட்பு படையினரும் 11 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில்., இறுதிக்கட்ட முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவத்தின் எதிரொலியாக தேனி மாவட்ட ஆட்சியரும்., தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் மூடப்படாத ஆழ்துளைக்கிணறுகளை மூடவேண்டும் என்றும்., இதனை அந்தந்த பகுதியின் வட்டாட்சியர்கள் மேற்பார்வை இட்டு உறுதி செய்யுமாறும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in trichy manaparai child struglled in bore well


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->