திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில்., காவல் துறையினரின் அடுத்த அதிரடி..!! - Seithipunal
Seithipunal


திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடை கொள்ளை சம்பவத்தில், திருவாரூரைச் சேர்ந்த 5 பேரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கடையில், சுவரில் துளையிட்டு உள்புகுந்து கொள்ளையர்கள் 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகளை கொள்ளை அடித்து சென்றார்கள்.

இது குறித்து விசாரணை செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. நடத்தப்பட்ட விசாரணையில், திருவாரூர் மாவட்டம் சீராத்தோப்பைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன் என்பவன் மற்றும் சுரேஷ் என்பவன் இருவரும் இந்த கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்டது அம்பலமானது. 

அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் மற்றும் சுரேஷின் தாய் ஆகியோரை போலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக பலரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவலும் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில்., பல திடீர் திருப்பங்களும் ஏற்பட்டது. இந்த நிலையில்., இது தொடர்பாக மதுரை சமயநல்லூரை சார்ந்த கணேசன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த விசாரணையில்., அங்குள்ள சோழவந்தான் மலைப்பகுதியில் நகையை புதைத்து வைப்பதாக கூறிய நிலையில்., அங்கு விரைந்த காவல் துறையினர் புதைத்து வைக்கப்பட்டு இருந்து நகைகளை மீட்டனர். தற்போது வரை 26.5 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in trichy lalitha jewelry theft police rescue 26 kg gold


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->